• Dec 25 2024

டேய் அவன நிறுத்த சொல்லுங்கடா! ரஜனி,தனுஷ் படங்களை ஓவர்டேக் பண்ணிய மஞ்சும்மல் பாய்ஸ்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது" இந்த குணா படத்தின் டயலொக் இப்போ சமூகவலைத்தளங்களில் அதிக வைரல் ஆக்குவதற்கு முதல் காரணம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தற்போது மாஸ் காட்டி வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தான். 


இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தொடர்ந்து மாஸாக வசூல் சாதனைகளை செய்து வருகிறது. ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த இப்படம், சில தினங்களுக்கு முன் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது.


இந்த நிலையில், தமிழகத்தில் மட்டுமே இதுவரை மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரூ. 41 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 50 கோடியை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் லால் சலாம் படத்தின் தமிழக வசூலை பின்னுக்கு தள்ளிய மஞ்சும்மல் பாய்ஸ், திரைப்படம் தற்போது தனுஷின் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்தின் தமிழக வசூலையும் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement