• Dec 26 2024

'யாரும் பதற்றப்பட வேண்டாம்..' சற்றுமுன் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட வீடியோ!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா வரலாற்றில் இருந்து அழிக்கமுடியாத மாபெரும் நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அரசியலில் களமிறங்கிய பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

அதன்பின், முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்து துவங்கிய விஜயகாந்த் மொத்தமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதன்பின், உடல்நலம் சரியில்லாமல் போக தற்போது முழுமையாக மருத்தவ கவனத்தில் இருந்து வருகிறார்.

விஜயகாந்தின் உடல்நிலையானது கடந்த 24 மணிநேரமாக சீராக இல்லை எனவும் அவரது நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகின்றது என்றும் இன்னும் 14 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், கேப்டன் நலமாக இருக்கிறார். விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, நம் அனைவரையும் சந்திப்பார் என பிரேமலதா விஜயகாந்த் சற்று முன் வீடியோ ஒன்றை வெளியிட்டு சொல்லியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இன்று காலை மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கை வழமையானது தான். அதில் பதற்றப்பட வேண்டியது இல்லை. கேப்டன் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். வெகு விரைவில் வீடு திரும்பி உங்களை சந்திப்பார். அவர் செய்த தர்மம் அவரை காக்கும். அது வரையில் யாரும் எவ்வித வதந்திகளையும் நம்ப தேவை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement