• Dec 26 2024

''எங்களோட கனவு MG காரை வாங்கிட்டோம்" ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சீரியல் நடிகை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ரீதேவி அசோக், தனது ரசிகர்களுக்கு தங்களுடைய மகிழ்ச்சியை பகிரும் வகையில் குட் நியூஸ் ஒன்று சொல்லியுள்ளார்.

அதன்படி, 'எங்களோட கனவு காரை வாங்கிட்டோம்' என ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதை பார்த்தவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடிக்கும்போது அசோக் என்பரை திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீதேவி. இவருக்கு சித்தாரா என்ற பெண் குழந்தை உள்ளது.


'புதுக்கோட்டையில் சரவணன்' என்ற படத்தின் மூலம் கடந்த 2004ம் ஆண்டு  சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தான் ஸ்ரீதேவி. அதை தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடிப்பில் கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து, 2007-ம் ஆண்டு சின்னத்திரையில் கால் பதித்த ஸ்ரீதேவி, சன்டிவியின் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலின் மூலம்  அறிமுகமானார்.

இதை தொடர்ந்து, கஸ்தூரி, தங்கம், இளவரசி, வாணி ராணி, செம்பருத்தி, ராஜா ராணி, அரண்மனைக்கிளி, காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பட்டையை கிளப்பியுள்ளார் நடிகை ஸ்ரீதேவி.

அதேவேளை, அண்மையில் தான் அவர் 2-வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தனது ரசிகர்களுக்கு அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement