• Apr 23 2026

ரஜினியின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த 'துரந்தர் 2' இயக்குநர்.. வைரலான பதிவு.!

shali / 4 weeks ago

Advertisement

Listen News!

துரந்தர் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் ஆதித்யா தார் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் இணைந்துள்ள இந்த படம், மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விறுவிறுப்பான கதை அமைப்பு மற்றும் பிரமாண்டமான திரைக்காட்சிகள் காரணமாக படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


இந்த நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை பாராட்டி பதிவொன்றை வெளியிட்டார். அவரது பாராட்டு, படக்குழுவினருக்கு மிகப்பெரிய உற்சாகமாக அமைந்துள்ளது. ரஜினிகாந்தின் பாராட்டு கிடைத்தது என்பது, எந்த படக்குழுவிற்கும் ஒரு முக்கிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இயக்குநர் ஆதித்யா தார் தனது சமூக வலைத்தளத்தில் உணர்ச்சிகரமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில், “தங்கள் அனைவருக்கும் பெரிய கனவுகளைக் காணக் கற்றுக் கொடுத்தவரிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதம் என்பதில் பெருமிதம்.” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement