• May 28 2026

சன்னி லியோனை CM ஆக்கிடலாமா? - விஜய்யை வம்புக்கு இழுத்த சாட்டை துரைமுருகன்

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து மக்கள் மத்தியில் உருவாகியுள்ள எதிர்பார்ப்புகளுக்கு  மத்தியில், சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது நேரடியான மற்றும் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்குப் பெயர்பெற்ற அவர், விஜய்யின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்துள்ளார்.


அவர் கூறுகையில், “நான் 36 வருஷம் நடிச்சேன்னு சொல்லிட்டு நேரா வருவாராம் இவரை முதல்வர் ஆக்கிடணுமாம். நல்லா டான்ஸ் ஆடுவேன்னு சொன்னா, உன்ன விட பிரபுதேவா நல்லா டான்ஸ் ஆடுவார்; அவரை CM ஆக்கிடலாமா? நான் பெரிய கவர்ச்சி கண்ணன்னு சொன்னா, உன்ன விட சன்னி லியோன், நயன்தாரா கவர்ச்சி கன்னிகள்; அப்போ அவர்களையும் முதல்வர் ஆக்கிடலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “நடிப்பதாலே ஓட்டு கிடைக்காது; மக்களை உண்மையாக நேசிக்க வேண்டும்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த கருத்துக்கள் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்த பேச்சு வைரலாக பரவி வரும் நிலையில், சிலர் இதை ஆதரித்து கருத்து தெரிவிக்க, மற்றொருபக்கம் விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement