• Dec 25 2024

எதிர்நீச்சல் சீரியலில் கடத்தல் சீனுக்கு முட்டுக்கட்டையான புதுக் கதை! இனி குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவி ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில் ஈஸ்வரி தான் சபதம் போட்டபடி தர்சினியின் திருமணத்தை நிறுத்துவதற்காக பெண்கள் சிலரை வீட்டுக்கு கூட்டி வந்துள்ளார். அதே நேரத்தில் இதுவரைக்கும் ஜெயித்துக் கொண்டிருந்த குணசேகருக்கு இப்போது அடி விழப் போவதாகவும் தெரிகிறது.

எதிர்நீச்சல் சீரியலில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையும் குணசேகரன் தான் ஜெயித்துக் கொண்டுள்ளார் . இதை பார்க்கும் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சண்டை சச்சரவுகள் இருந்தாலும் இந்த சீரியலில் காமெடிகள், அடுத்த கட்டத்துக்கு பெண்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

ஆனாலும் சமீப காலமாகவே இந்த சீரியலில் ஒரே கடத்தல் காட்சிகளும், அழுகை காட்சிகளும் தான் இடம்பெறுகின்றது. எல்லா இடத்திலும் எதிர்நீச்சல் பெண்கள் தோத்துக்கொண்டே உள்ளார்கள். இந்த சீரியல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இதுவரைக்கும் ஒரு இடத்தில் கூட பெண்கள் ஜெயித்ததாக காட்டப்படவில்லை இது ரசிகர்களை ஏமாற வைத்துள்ளது.

ஆரம்பத்தில் அப்பாத்தா காணாமல் போயிருந்தார். அதற்கு பிறகு தர்ஷினி காணாமல் போனார். இப்போது ஜனனியின் அம்மாவும் தங்கச்சியும் காணாமல் போய் உள்ளார்கள். அவர்களை தேடிப்போன ஜனனியும் காணாமல் போய்விட்டார். அதே நேரத்தில் ஜனனியின் தங்கச்சியை காதலித்த உமையாளின் மகனும் காணாமல் போய் உள்ளார்.

இவ்வாறு இந்த சீரியலில் ஒரே கடத்தல் காட்சியாக இருந்து வந்த நிலையில், தற்போது குணசேகரனுக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது, இனிமேல் அவருக்கு தோல்வி தான்  கிடைக்கும் என கடந்த சனிக்கிழமை எபிசோடில் குணசேகரின் மாமா சாமியாடி குறி சொல்லியிருந்தார். 


ஏற்கனவே, இவர் இதற்கு முன் அவர் குறி சொல்லியது போலவே தான் கதை போய்க்கொண்டிருந்தது. உதாரணமாக ஜனனிக்கு திருமண வாழ்க்கை போராட்டமாக தான் இருக்கும் என்று சொல்லியிருந்தார். அதேபோல ஆதிரைக்கும், யாருக்குமே நடக்காத மாதிரி உனக்கு கல்யாணம் நடக்கும் என்று சொன்னார். அது போலவே தான் நடுத்தெருவில் வைத்து ஆதிரைக்கு கல்யாணம் நடந்தது.

இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில், உமையாள் தன்னுடைய மகன் காணாமல் போன விஷயத்தை குணசேகரனிடம் சொல்ல, குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். ஆனால் காரில் உட்கார்ந்து இருந்த தர்ஷினி இதை கேட்டு நிம்மதி அடைகிறாள்.

அதே நேரத்தில் சக்தி, கதிருக்கு போன் போட்டு, உன்னோட அம்மாவும் தங்கச்சியும் இருந்தா தானே என அந்த அம்மா கேட்டுச்சு இல்ல என சக்தி தனக்கு இருந்த சந்தேகத்தை கேட்கிறான். அது தான் பாய்ண்ட்டே,  அந்த பொம்பளை சொன்னதை வைச்சு நம்ம அண்ணனே ஜனனியை தூக்கி இருந்தா? என கதிர் குணசேகரன் மீது சந்தேகப்பட்டு சொல்ல சக்தி ஷாக் ஆகிறான். 

மறுப்பக்கம், வீட்டிற்கு தர்சினியை குணசேகரன் கூட்டிக்கொண்டு வர, அந்த நேரத்தில் அங்கு சில பெண்களோடு ஈஸ்வரி வழிமறித்து நிற்கிறார். அத்தோடு இந்த பெண்களுக்கு பதில் சொல்லிட்டு போங்க என்ன சொல்கிறார்.

இதை பார்க்கும் போது அவர்கள் குழந்தை திருமணத்திற்கு எதிராக வந்தார்கள் என்று தோணுகின்றது. இதனால் தர்ஷினி மீண்டும் பள்ளிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் முயற்சிகளை எடுக்கிறேன் என ஈஸ்வரி சொல்லிய நிலையில், இனி எதிர்நீச்சல் பெண்கள் எவ்வாறு ஜெயிக்கப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement