• Apr 17 2026

பாலிவுட்டில் ரௌடி பேபிக்கு அடித்த ஜாக்பாட்! நயன்தாராவையே மிஞ்சி பேசப்பட்ட சம்பளம் ?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் ஒட்டுமொத்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதை அமைந்திருக்கும். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சாய் பல்லவி வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்க உள்ள ராமயணா படத்தில், நடிகை சாய் பல்லவிக்கு பேசப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.


அதன்படி,  ராமயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் சரித்திர படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் சாய் பல்லவி.


இப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூர் நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளார். 

மேலும் ராவணனாக நடிகர் யாஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுவதோடு, இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமானும், ஹேன்ஸ் ஜிம்மரும் இணைந்து இசையமைக்க உள்ளார்களாம். 

இவ்வாறான நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை சாய் பல்லவிக்கு ரூ.10 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement