• Dec 26 2024

தப்பித்து விட்டார் பிக் பாஸ் போட்டியாளர்... மிக்ஜாம் புயலால் இரத்து செய்யப்பட்ட எலிமினேஷன் ரவுண்ட்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னை முழுவதும் மிக்ஜாம் புயலால் தொடர் மழை பெய்து வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மக்கள் பலரும் தங்கள் உடமைகளை இழந்து உணவு ,நீர் இன்றி கஷ்ட்டபடுகின்றனர். இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுகள் வழங்கபட்டு வருகிறது. 


இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது தற்போது கொஞ்சம் பரபரப்பாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சென்னை முழுவதும் வெள்ளம் நிரம்பி மக்கள்   பாதிக்கப்பட்டுள்ளததால் இந்த வாரத்துக்கான எலிமினேஷன் ரத்து செய்யப்பட்டுள்ளது.


காரணம் அநேகமான மக்களுக்கு புயலினால் வாக்களிக்க இயலவில்லை இதனாலே இந்தவார போட்டியாளர் எலிமினேஷனில் இருந்து தப்பித்துவிட்டார்.

Advertisement

Advertisement