• Jan 14 2025

எதுக்காக இப்பிடிக் கிளப்பி விடுறீங்க,- கணவருடன் ஜோடியாக வந்த ஐஸ்வர்யா ராய்- அப்போ விவாகரத்து பொய்யா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான 'இருவர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்.இப்படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பிய நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் மலைபோல் குவிந்தது.

தொடர்ந்து தமிழில் வெளியான ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் என பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தில் நந்தினி என்னும் காரெக்டரில் நடித்திருந்தார்.


இப்படத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்திருந்தாலும் தன்னுடைய அழகினாலும் இயல்பான நடிப்பினாலும் ரசிகர்களின் மனதில் நந்தினியாக நிலைத்து நிற்கின்றார்.

இப்படியான நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய கணவர் அபிசேக் பச்சனைப் பிரியப் போவதாகவும் இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக பரஸ்பர புரிந்துணர்வு இருப்பதாகவும்,தகவல் வெளியாகியிருந்தது.


ஆனால் அது உண்மை இல்லை என்பதை உணர்த்தும் விதமாக இருவரும் பிரபல நிகழ்ச்சி ஒன்றிற்கு மகளுடன் சேர்ந்து குடும்பமாகப் போயிருக்கின்றனர்.இது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இருவரும் பிரியவில்லை என்பது உறுதியாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement