பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் தனுஷின் அண்ணா செல்வராகவன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா குறித்து புகழ்ச்சியான ஒரு சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் நயன்தாராவை குறித்து பேசும் போது "நான் ஐயா படத்தை பார்த்தபோது தான் நயன்தாரா மிகப் பெரிய ஹீரோயினாக உயர்வார் என்று நம்பினேன். அந்த நேரத்தில் என் தம்பி தனுஷ் கூட அதை நம்பவில்லையென்றாலும் இன்று நயன்தாரா மிகப் பெரிய ஸ்டார் ஆகி இருக்கிறார்" என்று தெரிவித்தார்.
அதேபோல் "எதிர்நீச்சல் படத்தை பார்த்தபோது, சிவகார்த்திகேயன் மிகப்பெரிய ஸ்டாராக உயர்வார் என்று நான் சொன்னேன். இன்று அவர் முன்னணி ஹீரோவாக உலகெங்கும் ஜொலித்து வருகிறார்" என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் செல்வராகவனின் சினிமா மற்றும் அவரின் முன்னணி நட்சத்திரங்களின் வளர்ச்சி பற்றி கூறிய வார்த்தைகள் ரசிகர்களிடம் தற்போது அதிகம் பேசப்படுகின்றன.
Listen News!