• Dec 26 2024

24 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த எவர்கிரீன் ஜோடி! வைரல் ஆகும் செல்பி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த நடிகை என்றால் அது ஷாலினியாக தான் இருக்க முடியும். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஷாலினி, தமிழில் ஹீரோயினாக வெறும் ஐந்து படங்களில் மட்டும் தான் நடித்துள்ளார். அந்த ஐந்து படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது.

காதலுக்கு மரியாதை என்ற படத்திலேயே முதல் முதலாக ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் ஆனதால் அதன் பிறகு கண்ணுக்குள் நிலவு என்ற படத்தில் மீண்டும் விஜய் உடன் ஜோடி சேர்ந்தார்.

இதை தொடர்ந்து அஜித்துடன் பட வாய்ப்பு கிடைத்தது. அதில் அமர்க்களம் என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அந்தப் படமும் ஹிட்டானதோடு இந்த படத்தின் மூலம் இவர்களுடைய காதலும் மலர்ந்தது. அமர்க்களம் படத்தில் நடித்து முடித்த கையோடு ஷாலினியை கரம் பிடித்தார். அஜித் குமார் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முற்று முழுதாக விலகிவிட்டார்.

d_i_a

2000 ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் மாதவனுக்கு ஜோடியாக அலைபாயுதே படத்திலும், பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும் ஆகிய இரண்டு படத்தையும் திருமணம் ஆனபின் நடித்து முடித்து இருந்தார். இந்த படங்களில் ஏற்கனவே கமிட்டாகி இருந்ததால் அந்த படங்களில் நடித்திருந்தார்.


இந்த படங்களில் அலைபாயுதே படம் ஷாலினி கேரியரில் மிகப்பெரிய மாஸ்டர் பீஸ் படம் ஆகும். இந்த படம் பலருக்கும் ஒரு முன்னோடியாக காணப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் இன்றும் இந்த படம் 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது 24 ஆண்டுகளுக்கு பின்னர் ஷாலினியும் மாதவனும் மீண்டும் சந்தித்துள்ளனர். அப்போது மாதவன் உடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஷாலினி. தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement