• Dec 26 2024

எல்லாரும் உங்க வேலையை பாருங்க", தினேஷ் விவகாரத்திற்கு பதிலடி கொடுத்த ரச்சிதா- கமலையும் சொல்கின்றாரா?

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் முடிவு கட்டத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் யார் டைட்டில் ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது.

இதில் டிக்கெட்டூ பினாலே டாஸ்க்கில் விஷ்ணு வெற்றி பெற்று முதலாவது பைனலிட்ஸ்டாக தேர்வாகியுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் தினேஷ்.


அவர் நடிகை ரச்சிதாவைத் திருமணம் செய்திருந்தார். இருப்பினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது பிரிந்து வாழ்கின்றனர்.அவரது திருமண வாழ்க்கை பற்றி பிக் பாஸ் வீட்டில் விசித்ரா மோசமாக பேசி வருகிறார்.

'இப்படிப்பட்டவர் உடன் வாழ முடியாது, ஓட வேண்டியது தான்' என விசித்ரா பேசி இருந்ததற்கு நேற்று கமல் கண்டனம் தெரிவித்தார்.நெட்டிசன்களும் தற்போது ரச்சிதா மீண்டும் தினேஷ் உடன் சேர்வாரா என சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு ரச்சிதா பதிலடி கொடுத்து இருக்கிறார்.


"இதோட நிப்பாட்டுங்க.. எல்லாரும் judge பண்றீங்க, ஆனால் என் வாழ்க்கையை யாரும் வந்து வாழ முடியாது. இது என்னுடைய battle.. நான் தனியாக போராடிக்கொள்கிறேன். எல்லாரும் உங்க வேலையை பாருங்க" என கோபமாக ரச்சிதா பதிவிட்டு இருக்கிறார்.  

Advertisement

Advertisement