சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், எல்லாருக்கும் முன்னிலையில் முத்து, இனி அந்த காசு எனக்கும் வேணாம் ரவிக்கும் வேணாம். ஆனால் இந்த கடைக்கு அப்பா தான் ஓனராக வேண்டும் என்று ஒரு குண்டை தூக்கி போடுகின்றார். இதனால் ரோகிணி, மனோஜ் அதிர்ச்சி அடைகின்றார்கள்.
இதைத்தொடர்ந்து மனோஜ் ரூமுக்கு சென்ற விஜயா, ரோகினிடம் எல்லாம் அந்த 27 லட்சத்தால் வந்தது. என்னிடம் இந்த விஷயத்தை சொல்லி இருந்தால் நான் உங்களை அவமானப்படாமல் மறைத்திருப்பேன். இப்போது எனக்கும் அவமானம். இது போகணும் என்றால் உங்க அப்பா கிட்ட சொல்லி அந்த காச அனுப்ப சொல்லு என்று ரோகினிக்கு சொல்லிச் செல்கின்றார்.
அதன் பின்பு மொட்டை மாடியில் மீனாவும் முத்துவும் மனோஜ் ரோகினியை போல நடிக்கின்றார்கள். அதாவது இந்நேரம் மனோஜ்க்கு பாலரம்மா துரத்தி துரத்தி அடிப்பார் என்று கம்புடன் மீனா முத்துவை துரத்தி அடிக்கின்றார். இறுதியில் ரோகிணியிடம் நிறைய ரகசியங்கள் இருக்குது அது ஒன்னொன்னா வெளிவரும் என்று முத்து சொல்லுகின்றார்.
அதன் பின்பு மறுநாள் முத்து செல்வத்திடம் இரண்டு மாலைகளை வாங்கி வருமாறு சொல்லுகின்றார். மேலும் இன்றைக்கு பதவி ஏற்பு விழா இருக்குது அதற்கு வா என்று அழைக்கின்றார். அதன் பின்பு அண்ணாமலை இது எல்லாம் வேணாம் என்று சொல்ல, மனோஜ் அடிக்கடி ஏமாறுகின்றான். அதனால் நீங்க இருந்தால் தான் சரியாகும் என்று சொல்லுகின்றார்.
இதனால் அண்ணாமலையும் முத்து சொல்வது சரி என விஜயாவிடம் சொல்லிவிட்டு ரெடி ஆவதற்கு செல்லுகின்றார். இதனால் ஸ்ருதிக்கும் ரவிக்கும் போன் பண்ணி மனோஜின் ஷோரூம் வர சொல்லுகின்றார் மீனா.அங்கு அவர்கள் போனதும் மனோஜூம் ரோகிணியும் அதிர்ச்சி அடைகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!