பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகா காலையில் உப்புமா செய்து கோபிக்கு கொடுக்கின்றார். இதனால் உடம்பு சரியில்லாதவனுக்கு இந்த சாப்பாடு யார் கொடுப்பா என்று ஈஸ்வரி சத்தம் போடுகின்றார். ஆனாலும் கோபி வேறு வழி இல்லாமல் சாப்பிடுகின்றார்.
இது பிடிக்காமல் ஈஸ்வரி எழுந்து சென்று விடுகின்றார். இதை பார்த்து ராதிகாவும் பாக்கியாவும் சிரிக்கின்றார்கள். அதன் பின்பு ராதிகா ஆபீஸ்க்கு செல்லுகின்றார். போகும்போது கவனமாக இருக்கும் மாறும், மாத்திரைகளை ஒழுங்காக போடுமாறும் கோபிக்கு சொல்லிவிட்டு செல்கின்றார்.
இதை தொடர்ந்து பாக்யாவும் ரெஸ்டாரண்டுக்கு கிளம்ப அங்கிருந்த இனியா, நீ செய்ற ஒண்ணுமே எனக்கு பிடிக்கல.. ராதிகாவை வீட்டை விட்டு போக சொல்லுமாறு சொல்லுகின்றார். ஆனாலும் நான் அவரை கூட்டி வரவில்லை.. நான் அவரை கல்யாணம் பண்ணவில்லை.. எல்லாம் உங்க அப்பா செய்தது தானே.. அத பத்தி உங்க அப்பா கிட்டயே பேசு என்று பாக்கியா சொல்லிவிட்டு செல்லுகின்றார்.
இதனால் இனியாவும் கோபியிடம் பேசுவதற்காக செல்லுகின்றார். ஆனால் அங்கு கோபி எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளையும் அவரால் முன்பு போல் செயல்பட முடியவில்லை, சின்ன விஷயமாக இருந்தாலும் பயமாக இருக்கின்றது என்று இனியாவிடம் பேசியதையும் வைத்து அவர் எதுவும் பேசாமல் மீண்டும் வந்து விடுகின்றார்.
இந்த விஷயத்தை ஈஸ்வரியிடம் சொல்ல, நானும் கோபியின் உடல் நிலையை பார்த்து தான் எதுவும் பண்ணாமல் இருக்கின்றேன். கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாக வரும். அதுவரைக்கும் கோபியிடம் பேச வேண்டாம் என்று இனியாவுக்கு அட்வைஸ் பண்ணுகிறார்.
இறுதியாக மதிய சாப்பாட்டிற்கு கோபியை ஈஸ்வரி அழைக்க, ராதிகா அவருக்கு லெமன் ரைஸ் செய்து வைத்திருக்கின்றார். ஆனால் பாக்கியா விதம்விதமாக சமைத்து வைத்த சாப்பாட்டை கோபிக்கு எடுத்து போடும்போது, அந்த நேரத்தில் பாக்கியா வந்து என்ன செய்றீங்க என்று கேட்கின்றார்.
மேலும் அவர் தங்குவதற்கு வாடகை தான் வாங்குகின்றேன். சமைத்து போட எல்லாம் முடியாது. நீங்க மட்டும் தான் சாப்பிடணும் என்று ஈஸ்வரிக்கு சாப்பாடு போட்டு கொடுத்துவிட்டு செல்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!