• Dec 26 2024

தமிழ் சினிமாவில் மற்றொரு பேரிழப்பு.. பிரபல இயக்குநர் சுரேஷ் சங்கையா திடீர் மறைவு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் தான் சுரேஷ் சங்கையா.

இந்த படத்தில் விதார்த், ரவீனா ஆகியோர் நடித்திருந்தார்கள். விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை ஒரு கிடாயின் கருணை மனு பெற்று இருந்தது. 

குலசாமி கோயிலுக்கு குடும்பத்துடன் மற்றும் உறவினர்களுடன் செல்லும் விதார்த் எதிர்பாராத விதத்தில் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றார். அவரோடு மொத்த உறவினர்களும் சிக்கிக்கொண்ட அந்தப் பிரச்சினையில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள் என்பதை தனது திரைக்கதை மூலமாக வெளிப்படுத்தி தமிழ் சினிமாவை தன் பக்கம் திருப்பி இருந்தார் இயக்குனர் சுரேஷ் .

d_i_a

அதன்பின்பு பிரேம் ஜியை வைத்து சத்திய சோதனை என்ற படத்தையும் இயக்கியிருந்தார். காமெடி ஜானரில் எடுக்கப்பட்ட இந்த படமும் நல்ல வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. அதன் பின்பு ஜோகி பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கி வந்தார்.


இந்த நிலையில், இயக்குனர் சுரேஷ் சங்கையா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்து உள்ளார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை கடந்த ஒன்பதாம் திகதி வயது மூப்பு காரணமாக டெல்லி கணேஷ் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement