• Jan 14 2025

இலங்கைக்கு பறக்க தயாரான பிரபல சீரியல் ஜோடி.. இதுதான் மேட்டரா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களாகவும் சிறந்த தம்பதிகளாகவும் வலம் வருபவர்கள் தான் சஞ்சீவ் ஆலியா மானசா ஜோடி. இவர்களுக்கு என்றே தனித் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே  இருவரும் காதலித்து அதன் பின்பு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளன. ஆனாலும் ஓய்வின்றி தமது வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றார்கள்.

சீரியல்களில் மட்டுமின்றி போட்டோஷூட் செய்வது, தனியார் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்வது, ஆடை மற்றும் நகை கடைகளை விளம்பரப்படுத்துவது என இருவருமே நிறைய விஷயங்களில் கை தேர்ந்தவர்களாக காணப்படுகின்றார்கள்.


இந்த நிலையில், ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அதில் கூறுகையில், எதிர்வரும்  ஜூன் 15ஆம் தேதி இலங்கை செல்ல உள்ளதாகவும் தனியார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ள அந்த நிகழ்ச்சியில், போட்டிகள் இடம்பெறும் என்றும் அந்த நிகழ்ச்சியில் தாங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்கள்.

தற்போது குறித்த காணொளி வைரல் ஆகி வருவதோடு இலங்கையில் உள்ள ஆலியா மானசா சஞ்சீவின் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement