• Dec 26 2024

அர்ச்சனா- பிரதீப்க்காக பாடல் பாடிய நடிகர் யுகேந்திரன்... பாராட்டி வரும் ரசிகர்கள்... bigg boss news

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபல நிகழ்ச்சியான  பிக் பாஸ் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இந் நிலையில் மக்கள் வாக்கு மூலம் 3 சீசன்களுக்கு பின்னராக ஒரு பெண் வெற்றியை தழுவி கொண்ட பெருமை அர்ச்சனாவை சேர்ந்தது . 


வின்னர்ரான அர்ச்சனாக்கு எதிராக பல விமர்சனங்களும் எழுந்தன . PR மூலம் வெற்றி பெற்றார் அர்ச்சனா என்று எழும்பிய விமர்சனங்களுக்கு ,அர்ச்சனா ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர் . 


இந் நிலையில்  பின்னணி பாடகர் ,  நடிகர் மற்றும் இசை அமைப்பாளருமான நடிகர் யுகேந்திரன் . இதுவரை 600க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு அவ்வளவாக கை கொடுக்காவிட்டாலும்  இளம் தலைமுறைகள் மத்தியில் ரசிக்கப்படும் பல எவர்கிரீன் பாடல்களின் சொந்தக்காரர்.இவர் . 


இவர் வெற்றி பெற்ற அர்ச்சனா மற்றும் சீசன் 7 போட்டியாளரான  பிரதீபுக்கும் ஒரு அழகான பாடலை பாடி இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளார். "பந்தம் என்ன சொந்தம் என்ன போனால் என்ன வந்தால் என்ன" என்ற பாடலை பாடியுள்ளார்.  இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. 


Advertisement

Advertisement