• Dec 26 2024

மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம்... இந்திய பிரதமர் முதல் சினிமா பிரபலங்களின் வருகை... புகைப்படங்கள் இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் மலையாளத்தில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் சுரேஷ் கோபி. இவர் கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மலையாள திரை உலகின் பிரபல நடிகர் சுரேஷ் கோபி, தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் அஜித்தின் தீனா, சரத்குமாரின் சமஸ்தானம், விக்ரமின் ஐ, போன்ற படங்களில் நடித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பணியாற்றி வரும் சுரேஷ்கோபி, தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயம் பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


இந்நிலையில் இன்று நடிகர் சுரேஷ் கோபியின் மகள் பாக்யாவின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக வருகை தந்துள்ளனர்


இந்நிலையில் சுரேஷ்கோபியின் மகள் பாக்யா சுரேஷுக்கு இன்று கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். இதற்காக குருவாயூர் கோயிலில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நடிகர் ஜெயராம், திலிப், நடிகை குஷ்பூ என திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். 

திருமண புகைப்படங்கள் இதோ..




Advertisement

Advertisement