தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் "சர்தார் 2" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "சர்தார்" திரைப்படம் கார்த்தியின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாகும்.
இத்திரைப்படம் ஜாஸ் சிவன் இயக்கத்தில் உருவாகி திரில்லர் திரைப்படமாக ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இப்படம் 100 கோடி ரூபாய் மேல் வசூலித்ததன் பின்னணியில், "சர்தார் 2" பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பகுதியை உருவாக்க படக்குழு முடிவெடுத்திருந்தது.
அதன் அடிப்படையில் இந்த திரைப்படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மைசூரில் படமாக்கப்பட்டு வந்தது.அந்தக் காட்சியை படமாக்கும் போது அவருக்கு காலில் கடுமையாக அடிபட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் இது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் வெகுவிரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்கப் போவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
Listen News!