• Mar 04 2025

ரத்தத்தைக் குடித்து வாழும் இனத்தின் கதை....! நானியின் புதிய அவதாரம்!

subiththira / 8 hours ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி தற்போது தனது புதிய படமான "தி பாரடைஸ்" மூலம் மீண்டும் ரசிகர்களை மிரள வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. வழக்கமாக உணர்ச்சி மிகுந்த கதைகளை தேர்ந்தெடுக்கும் நானி, இம்முறை ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் நடித்துள்ளார்.

அத்துடன் ரத்தத்தை குடித்து வளர்ந்த ஒரு இனத்தின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, படக்குழு இப்படத்தின் க்ளிம்ப்ஸ் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான அதிர்ச்சியை வழங்கியுள்ளது.


இத்திரைப்படம், மனித உலகில் இருந்து மறைந்து வாழும் ஒரு இனத்தைப் பற்றியதாக அமைந்துள்ளது. அந்த இனத்தினர் ரத்தத்தை குடித்து உயிர் வாழும் ஒரு பயங்கரமான சமூகமாக உள்ளனர். இதனையே மையமாகக் கொண்டு அந்தப் படம் உருவாகியுள்ளது. மேலும் நானி தனது படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வரும் நடிகர். அந்தவகையில் "தி பாரடைஸ்" படத்திலும் அவர் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடித்துள்ளார் என்றே படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படம் இந்த மாதம் 26ம் திகதி திரையரங்கிற்கு வரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.



Advertisement

Advertisement