• Jun 11 2026

வசூல் மழையில் நனையுமா ‘LIK’? வெளியான ப்ரீ புக்கிங் தகவல்களால் ஷாக்கில் ரசிகர்கள்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

பிரதீப் ரங்கநாதன் ‘Love Today’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். தொடர்ந்து வெளியான ‘Dragon’ மற்றும் ‘Dude’ ஆகிய திரைப்படங்கள் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து, அவரை வெற்றி நாயகனாக நிலைநிறுத்தின. இதன் மூலம் தனது முதல் மூன்று படங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்ற ஹீரோவாக அவர் திகழ்கிறார்.


இந்நிலையில், இன்று (ஏப்ரல் 10) வெளியான அவரது புதிய படம் ‘LIK’ மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளதுடன், இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்துள்ளார்.

படத்தின் ப்ரீ புக்கிங் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, ‘LIK’ திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.2.5 கோடி வரையிலான முன்பதிவு வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ரசிகர்களிடையே படத்திற்கான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. ஆரம்ப நாளிலேயே இப்படம் நல்ல ஓப்பனிங்கை பெறும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Advertisement

Advertisement