நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

ஒரு நபர் அளித்த புகாரின் அடிப்படையில் தணிக்கை குழு சான்றிதழ் வழங்காமல் நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகி, இது அரசியல் அழுத்தம் காரணமாக நடந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத சூழலில், முழுப் படமே இணையத்தில் கசிந்துவிட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் படக்குழுவிற்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பும், அதன் வர்த்தக வாய்ப்புகளும் பாதிக்கப்படும் என கவலைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து நடிகர் சிபி சத்யராஜ் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “படம் ரிலீஸுக்கு முன்பே லீக் ஆகுவது மிகவும் வருத்தமானது. அனைவரும் தயவுசெய்து கசிந்த வீடியோக்களை பார்க்கவும், பகிரவும் வேண்டாம்.” என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!