பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியின் தொகுப்பாளர், “உங்களுக்கு எப்போதாவது அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தோன்றியதுண்டா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சல்மான் கான் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பதிலளித்தார்.

அதாவது, “எனக்கு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பலமுறை தோன்றியிருக்கிறது. ஆனால் நான் வசிக்கும் கட்டிடத்தில் மொத்தம் 8 பிளாட்டுகள் தான் உள்ளன. அதில் 3 பிளாட்டுகள் எங்களுடையது.
பிரதமர், அமைச்சர், எம்.எல்.ஏ, எம்.பி பதவிகளை எல்லாம் மறந்துவிடுங்கள். என் கட்டிடத்தின் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டாலும் கூட நான் தோற்றுவிடுவேன். என் சொந்த வீட்டிலிருந்தே எனக்கு 3 வாக்குகள் கூட கிடைக்காது.” என்று சல்மான் கான் கலகலப்பாக கூறினார்.
அவரின் இந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, அரசியல் குறித்து நேரடியாக பேசாமல் நகைச்சுவையுடன் பதிலளித்த விதம் பலரையும் கவர்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Listen News!