• Apr 23 2026

ஆண்கள் ஆதிக்கம் கொண்ட துறையில் பெண் சாதனை… ஆஸ்கர் விருதை தூக்கிய பெண் ஒளிப்பதிவாளர்

shali / 1 month ago

Advertisement

Listen News!

திரையுலகில் மிகவும் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படுவது Academy Awards எனப்படும் ஆஸ்கார் அகாடமி விருதுகள் ஆகும். உலகம் முழுவதும் உள்ள திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கனவாகக் கருதப்படும் இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பெரும் எதிர்பார்ப்புடன் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு நடைபெறும் 98th Academy Awards விழா தற்போது அமெரிக்காவின் California மாநிலத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


இந்த ஆண்டின் விழா பல்வேறு சிறப்பு தருணங்களால் கவனம் பெற்றுள்ளது. அதில் மிகவும் முக்கியமான மற்றும் வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படுவது ஒளிப்பதிவு பிரிவில் கிடைத்த வெற்றியாகும். ‘Sinners’ திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பெற்று உலக திரையுலகில் புதிய சாதனையை உருவாக்கியுள்ளார் ஆட்டம் டுரால்ட் அர்காபாவ். இதன் மூலம் ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண் ஒளிப்பதிவாளராக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

ஒளிப்பதிவு என்பது ஒரு திரைப்படத்தின் உயிராகக் கருதப்படும் தொழில்நுட்பக் கலை. காட்சிகளை அழகாக வடிவமைத்து, கதையின் உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ஒளிப்பதிவாளரின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். 

நீண்ட காலமாக இந்த துறையில் பெரும்பாலும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், ஒரு பெண் ஒளிப்பதிவாளர் இந்த பிரிவில் ஆஸ்கர் விருதை வெல்வது உலக திரைப்படத் துறைக்கு மிகப் பெரிய மாற்றத்தை சுட்டிக்காட்டும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement