தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராகத் திகழும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, தன்னுடைய தந்தை நடித்த சிந்துபாத் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் பீனிக்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அந்த படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவுடன் கிட்டத்தட்ட 10 வருட போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி பெற்றவர் விஜய் சேதுபதி. அதுவரையில் பல கஷ்டங்களை அனுபவித்ததாகவும், பல அவமானங்களை சந்தித்ததாகவும் பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்திருந்தார்.
விஜய் சேதுபதியின் கேரியரில் அவருக்கு திருப்புமுனையை கொடுத்த படமாக பீட்சா படம் காணப்படுகிறது. அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியடைந்தாலும், பல வெற்றிப் படங்கள் அவருக்கு தனி சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொடுத்தது.

தற்போது நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் கேரக்டரிலும் நடித்து வருகிறார். அதேபோல் தற்போது அவருடைய மகனும் சினிமாவில் கால் தடம் பதித்து பயணித்து வருகின்றார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோட் சூட் அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும், இதை பார்த்த ரசிகர்கள் மன்மதன் சிம்பு போல இருக்கீங்க.. என்று பல தரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். தற்போது அவரது புகைப்படங்கள் இணையதளத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Listen News!