• Oct 26 2024

அம்மாவுடன் சண்டை, காதல் மட்டும் வேணாம்- சீரியல் நடிகை பவித்ரா ஜனனி பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத தகவல்

stella / 10 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துக் கொண்ட சீரியல் நடிகை தான் பவித்ரா ஜனனி. இவரைப் பற்றி தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க.

பவித்ரா 1992ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி சென்னையில் பிறந்திருக்கின்றார்.இவர் ஜானகி மெட்ரிக்குலேசன் என்னும் பாடசாலையில் கல்வி பயின்றிருக்கின்றார்.தொடர்ந்து ஆல்பா ஆட்ஸ் அன்ட் சயன்ஸ் காலேஜில் டிகிரி முடித்திருக்கின்றார். படிப்பை முடித்த பின்னர் தான் நடிப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தாராம்.


மிடில் கிளாஸ் பேமிலியைச் சேர்ந்த இவருக்கு சின்ன வயசில இருந்தே மீடியாவில் வேலை செய்ய வேண்டும் என்பது தான் ஆசையாம்.அதனால் சின்னச்சின்ன காரெக்டரில் தான் முதலில் நடிக்க ஆரம்பித்தாராம். அதன் பின்னர் ஆப்பீஸ் சீரியலில் தான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாராம்.

தொடர்ந்து சரவணன் மீனாட்சி,ராஜா ராணி சீரியலில் சப்போட்டிங் காரெக்டர்களில் நடித்திருக்கின்றார். தொடர்ந்து ஈரமான ரோஜாவே என்னும் சீரியலில் லீட் ரோலில் நடித்ததன் மூலம் தான் இவர் கதாநாயகியாக அறிமுகமாகினாராம்.இதனால் இவருக்கு எப்போதும் இந்த சீரியல் தான் ரொம்ப பிடிக்குமாம்.


மேலும் இதற்கு அடுத்ததாக அண்மையில் முடிவடைந்த தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலிலும் நாயகியாக நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் அபி என்னும் கதாப்பாத்திரமாக ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றார். எப்போதும் ஜாலியாக இருக்கும் இவர் எல்லோருடனும் சகஜமாகப் பழகக் கூடியவராம். 

ஆனால் வீட்டில் தன்னுடைய அம்மாவுடன் மட்டும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருப்பாராம். இருந்தாலும் இவருக்கு அம்மாவைத் தான் ரொம்ப பிடிக்குமாம். இவர் சீரியலில் நடிக்க வந்த காலத்தில் இருந்து இதுவரை எந்த ரூமர்ஸையும் இவர் சந்தித்தது இல்லையாம்.காதல் கல்யாணம் என்பவற்றில் நம்பிக்கை இல்லாமல் இல்லையாம். எதுவும் இன்னும்  அமையல அமைந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற மைன்ட் செட்டில் இருக்கின்றாராம்.


இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றும் ஆசை இருக்கின்றதாம். குறிப்பாக விஜய் சேதுபதியுடன் நடிப்பது தான் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம் என ஒரு இன்டர்வியூவில் தெரிவித்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement