• Dec 24 2024

பிரபல நடிகரை தாக்கிய பெண் ரசிகை... திரைப்பட விழாவில் கலவரம்... அதிர்ச்சியில் படக்குழு!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சமீபத்தில் லவ் ரெட்டி படம் ரசிகர்கள் பார்வைக்காக தியேட்டரில் திரையிடப்பட்டது.  ஹைதராபாத் நிஜாம்பேட்டில் உள்ள ஜிபிஆர் மால் மல்டிபிளெக்ஸில் நடைபெற்றது அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக சம்பவம்  ஒன்று நடந்துள்ளது. இதனால் திரைப்பட குழுவினர் பார்வையாளர்கள் என அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். 


படத்தின் க்ளைமாக்ஸைப் பார்த்த உணர்ச்சிவசப்பட்ட பார்வையாளர் ஒருவர், படத்தில் தந்தையாக நடித்த நடிகர் ராமசாமி, காதல் ஜோடியை உண்மையில் பிரித்துவிட்டார் என்று நினைக்கவில்லை என்று அவர் மீது வசைபாடினார். இந்த எதிர்பாராத சம்பவத்தால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ஹீரோ அஞ்சன் ராமச்சந்திரா, நாயகி ஷ்ரவாணி, இயக்குனர் ஸ்மரன் ரெட்டி உள்ளிட்ட உறுப்பினர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி ஆரவாரம் செய்தனர். அந்தப் பெண்ணிடம் இது ஒரு திரைப்படம் என்றும், நடிகர் அப்பாவாக நடித்துள்ளார் என்றும், படத்தில் காட்டுவது போல் நிஜ வாழ்க்கையில் அவர் கெட்டவர் இல்லை என்றும் கூறினர்.  பின்னர் அந்த பெண் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டாள். இந்நிலையில் இம்மாதம் 18ஆம் தேதி லவ் ரெட்டி திரைப்படம் வெளியானது. இந்த சம்பவம் குறித்த விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 


Advertisement

Advertisement