• Dec 25 2024

மிரட்டவரும் “ROLEX" ! சூப்பர் அப்டேட் கொடுத்த சூர்யா! லோகேஷ் ஆசை நிறைவேறுமா?

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம். வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் யாரும் எதிர் பார்க்காத கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் நடிகர் சூர்யா. 


விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். இவரின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் மிரண்டு விட்டார்கள். இன்றும் ரோலக்ஸ் என்றால் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.


இந்நிலையில் நடிகர் சூர்யா ஒரு பேட்டி நிகழ்ச்சியில் 'வெறும் அரைநாள் நடித்த கதாபாத்திரம்தான் ரோலக்ஸ். அதற்கு இப்படியான அன்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. அந்தப் படத்திற்குப் பின்பு லோகேஷைச் சந்தித்தபோது,'ஏன் ரோலக்ஸுக்குத் தனிப் படம் செய்யக் கூடாது' எனக் கேட்டார். 


அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தது. ஆனால் இப்போது அவரின் வேலைகள், என் வேலைகள் எல்லாம் முடிய வேண்டும். 'ரோலக்ஸ்' மற்றும் 'இரும்புக்கை மாயாவி' ஆகிய படங்களில் எதை முதலில் செய்யலாம் எனவும் பேசினோம். ஆனாலும் இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என சூர்யா கூறியுள்ளார். 


Advertisement

Advertisement