• Jan 11 2025

கேம் சேஞ்சர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்..!! செம குஷியில் ராம் சரண், ஷங்கர்.!

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில்  ராம் சரண், கியரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஸ்ரீகாந்த், அஞ்சலி, சுனில், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த திரைப்படம் நேற்றைய தினம் உலக அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

கேம் சேஞ்சர் படத்தின் முதலாவது நாள் வசூல் விபரம் வெளியாகி  ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அதன்படி ஜீனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவரா படத்தின் முதல் நாள் வசூலை ராம்சரனின் கேம் சேஞ்சர் திரைப்படம் முறையடித்துள்ளது.

d_i_a

அதன்படி கேம் சேஞ்சர் திரைப்படம் முதலாவது நாளிலேயே 186 கோடிகளை வசூலித்துள்ளது. இந்த தகவல் அதிகார்வ பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வசூலில் சாதனை படைத்துள்ளது.


கேம் சேஞ்சர் திரைப்படம் முதல்வன் படம் போல் இருப்பதாகவும், கேப்டன் படத்தின் காப்பி எனவும் விமர்சகர்கள் விமர்சித்து வந்தார்கள். அதேபோல ரசிகர்களும் ஷங்கர் சார் இந்த படத்திலும் தங்களை ஏமாற்றி விட்டார் என்று குமுறி வருகின்றார்கள்.


இந்தியன் 2 படத்தில் தோல்வியை தழுவிய ஷங்கருக்கு இந்த படம் எவ்வளவு தூரம் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் வெற்றியை ராம்சரண், ஷங்கர் உட்பட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படம் வெளியாகிய இணையத்தில் வைரலாக உள்ளது.

Advertisement

Advertisement