• Dec 26 2024

திடீரென எழில் மற்றும் அமிர்தா முன்னாடி வந்து நின்ற கணேஷ், செழியனுக்கு கிறீன் சிக்னல் கொடுத்த ஜெனி- அதிர்ச்சியில் பாக்கியா- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் வீட்டில் எல்லோரும் நிலா கான்டீனில் செய்த சேட்டைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.அப்போது பாக்கியா எல்லோரும் வந்தாங்க நீங்க மட்டும் தான் வரல இன்டைக்கு தான் கடைசி வாறீங்களா அத்தை என்று கேட்க ஈஸ்வரி எதுவும் சொல்லாமல் எழுந்து சென்று விடுகின்றார்.


தொடர்ந்து எல்லோரும் பொருட்கண்காட்சியில் பிஸியாக இருக்கும் போது கோபி வீட்டிலிருந்து யோசிச்சுச் கொண்டிருக்கின்றார். அப்போது அங்கு வரும் ஈஸ்வரி கோபியை சமாதானப்படுத்துகின்றார். மறுபுறம் பழனிச்சாமி மினிஸ்டர் வருகின்றார் என்று சொன்னதால், பாக்கியா அற்காக ஆயத்தங்களைச் செய்கின்றார்.

பின்னர் மினிஸடரும் வந்து பாக்கியாவைப் பாராட்ட இது டிவியில் போட செழியன் ஓடி வந்து டிவியைப் போட, ஈஸ்வரி பாக்கியாவைப் பார்த்து சந்தோசப்படுகின்றார். தொடர்ந்து பாக்கியா டிவியில் வரும் வீடியோவை செழியன் ஜெனிக்கு அனுப்ப ஜெனி அந்த வீடியோவைப் பார்த்து விட்டு பாக்கியாவுக்கு வாழ்த்து தெரிவித்து ரிப்ளே பண்ணியதால் செழியன் சந்தோசப்படுகின்றார்.


மறுபுறம் மினிஸ்டர் வந்து போன சந்தோசத்தில் பாக்கியா இருக்க அங்கு அமிர்தாவின் முதல் கணவரான கணேஷ் வந்து நிற்பதைப் பார்த்து பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். பாக்கியா எழிலையும் அமிர்தாவையும் வேறொரு வழியால் அனுப்பி வைக்கின்றார்.பாக்கியாவிடம் தனியாக வந்து பேசும் கணேஷ் இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கு, அதுக்குள்ள நீங்களே உண்மையை சொல்லாவிட்டால் நானே வந்து சொல்லிவேன் என மிரட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement