• Dec 25 2024

அமெரிக்காவில் வைரலாகியுள்ள கங்குவா திரைப்படம் ! கவனத்தை ஈர்க்கும் புதிய விளம்பர முயற்சி..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

எதிர்வரும் 14 ஆம் திகதி திரையரங்கிற்கு வரவுள்ள சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் திஷா பட்டாணி நடிப்பில் உருவாக்கி இருக்கும் இப்படத்திற்கு dsp அவர்கள் இசையமைத்துள்ளார் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் இந்நிலையில் படக்குழு கடந்த இரண்டு வாரங்களாக படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை ஆரம்பித்துவிட்டன. 


அந்தவரிசையில் தற்போது அமெரிக்காவின் பிரபலமான தெருக்களில், வாகனங்களில் காட்டப்படும் கங்குவா படத்தின் விளம்பரங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் நியூயார்க்கின் நகர சூழலில் எடுக்கப்பட்டுள்ளன, இதில் கங்குவா படத்தின் போஸ்டர்கள் வாகனங்களில் பிரத்யேகமாக காட்சியளிக்கின்றன. வாகனத்தின் மூலமாக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த விளம்பரங்களை பார்வையாளர்கள் காண முடிகிறது.


இந்த விளம்பரங்களைப் பார்த்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய திரைப்படங்களின் விளம்பரங்கள் அமெரிக்காவில் இவ்வாறு பெரும் அளவில் இடம் பெறுவது குறித்தும், கங்குவாவின் உலகளாவிய அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இது அமைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement