• Dec 25 2024

"அவருக்கு வாழ்க்கையில பெரிய ஆசை இருந்திச்சு" கதறி அழுத சீரியல் நடிகர்கள்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

டெல்லி கணேஷ் தூத்துக்குடியில் பிறந்த மூத்த தமிழ் நடிகர் ஆவார்.இவர் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்துள்ளார்.தமிழ் திரைப்பட உலகின் ஆழமான நடிப்பு திறமை கொண்ட இவர் மறைந்த செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நகைச்சுவை, சீரியஸ் ரோல் மற்றும் குணச்சித்திரங்களில் தனித்தன்மையை நிரூபித்த டெல்லி கணேஷ், தனது திறமையான நடிகத்திறனின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.


டெல்லி கணேஷின் மறைவு செய்தியை கேட்டு அவரது வீட்டிற்கு பல சக நடிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தனர். சீரியல் உலகின் நடிகர்களான ஸ்ரீ மற்றும் ராஜிக்கமல் தங்கள் தலைவனை இழந்தது என்ற உணர்வில் துயரத்தில் கதறி அழுதனர்.மற்றும் இவர் இருக்கும் இடம் எல்லாம் எப்போதுமே கலகலப்பாக தான் இருக்கும் இப்போது இவர் இல்லை என்பதனை எங்களால் ஏற்கமுடியவில்லை,அவருக்கு இருந்த பெரிய ஆசை ஏக்கம் எல்லாமே தனது மகன் பாலாவினை பெரிய நடிகனாக்கி பாக்கணும் என்கிறது தான் என நடிகை லேகா அவர்கள் மனமுருகி கண்ணீர் விட்டுள்ளார்.


Advertisement

Advertisement