• Dec 26 2024

படம் வெளியாகும் முன்னே கவின் மொட்டை மாடியில் பார்ட்டி !! இரசிகர்களுக்கும் அழைப்பு .....

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

திரைப்படங்களின் விளம்பரத்திற்காக போஸ்ட்டர்கள் , பேனர்கள் வைத்த காலங்கள் போய் இன்று சமூக ஊடகங்களே விளம்பரத்திற்கான இடங்களாக இருக்கின்றன.அந்த வகையில் யூடியூப் தளங்களின் பிரபலமான சேனல்களின் உதவியை இன்றைய ஹீரோக்கள் மற்றும் படக்குழுக்கள்  நாடுகின்றன.இவ்வாறே கவினும் ஸ்டார் ப்ரோமோஷனில் இறங்கியுள்ளார்.


விஜய் டிவியின்  சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமாகி  புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3  இல் கலந்து கொண்டு மக்கள் மனங்களை வென்றார்.தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் இறுதியாக நடித்த டாடா திரைப்படம் இரசிகர்கள் மனதை வென்றதுடன் கவினுக்கு ஒரு குடும்ப நாயகன் பதவியை வாங்கிக்கொடுத்ததெனலாம்.


தற்போது எலன் இயக்கத்தில் கவின் நடித்திருக்கும் ஸ்டார் திரைப்படம் வருகிற மே மாதம் 10ஆம் திகதி  வெளியாக இருக்கும் நிலையில் கவின் பிரபல யூடியூப் தளமொன்றின் ஷோவான மொட்டைமாடி பார்ட்டி நிகழ்ச்சியில்  திரைப்படம் மற்றும் பொதுவான நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு திரைப்படத்துக்கான ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளார்.அக் காணொளியில் இரசிகர்களை தியட்டருக்கும் அழைத்துள்ளார்.

Advertisement

Advertisement