• Dec 26 2024

கல்யாணம் பண்ணினா இவங்களுக்கு தான் நல்லது .. நமக்கு ஒரு யூஸ் இல்லை.. நடிகை வரலட்சுமி

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

திருமணம் செய்தால் திருமணம் செய்பவர்களுக்கு ஒரு பயனும் இல்லை என்ற அர்த்தத்தில் திருமணம் செய்தால் இவர்களுக்கு மட்டுமே நன்மை என்று காமெடியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் வரலட்சுமி என்பதும் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது என்பது தெரிந்தது. இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் சரத்குமாரின் ஒட்டுமொத்த குடும்பமும் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது. 39 வயதாகும் வரலட்சுமி இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திருமணம் ஒரு பக்கம் இருந்தாலும் தெலுங்கு திரையுலகில் வரலட்சுமி பிஸியாக இருக்கிறார் என்றும் அவர் ஏற்கனவே கமிட்டான படங்களை முடித்துவிட்டு தான் திருமண தேதியை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் திருமணம் செய்து கொண்டால் யாருக்கு நன்மை என்ற காமெடி வீடியோவை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு திருமணம் நடந்தால் புகைப்பட கலைஞர்கள், வீடியோகிராபர், சமையல்காரர், மண்டபக்காரர், மேக்கப் போடுபவர், சேலை கட்டி விடுபவர் ஆகியோர்களுக்கு தான் நல்லது என்றும் அதனால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் காமெடியாக பதிவு செய்துள்ளார்.

அப்படியானால் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எந்த நன்மையும் இல்லையா என்பதை மறைமுகமாக வரலட்சுமி கூறுகிறாரா? திருமணத்திற்கு முன்பே ஏன் இந்த வெறுப்பு என்று கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. மேலும் அவரது லுக்கை பார்க்கும்போது அச்சு அசலாக சமந்தா போலவே இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement