• Apr 04 2025

ஆகாஷுக்காக செழியன அடித்த பாக்கியா...! கோபத்தில் கொந்தளித்த ஜெனி..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இன்னும் ஒரு தடவ அவன் இனியா கூட பேச ட்ரை பண்ணலே அவன வெட்டிப் போட்டிருவேன் என செழியன் சொல்லுறான். இதைக் கேட்ட பாக்கியா உடனே செழியன அடிக்கிறாள். அதைப் பார்த்து எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பிறகு செழியன் என்ன எதுக்காக அடிக்கிற என்று கேட்டுட்டு உனக்கு உன்ட குடும்பத்த விட அந்தப் பெடியன் தான் முக்கியமா போச்சு என்கிறான்.

பின் ஈஸ்வரி எல்லாப் பிரச்சனைக்கும் இவள் தான் காரணம் என்று பாக்கியாவ பேசுறாள். அதுக்கு பாக்கியா இவன்செஞ்ச இந்தக் கேவலமான வேலை உங்க யாரு கண்ணுக்குமே தெரியவே இல்லையா என்கிறாள். பிறகு எங்க இருந்து உனக்கு இவளவு தைரியம் வந்திச்சு என்று கேக்கிறாள். அதுக்கு ஜெனி ஆன்டி நிறுத்துங்க அதுதான் அவனுக்கு எதுவும் ஆகல எல்லோ பிறகு என்ன என்று பாக்கியாவக் கேக்குறாள்.


அதற்கு ஈஸ்வரி அப்படிக் கேளு ஜெனி என்கிறாள். இதைக் கேட்ட பாக்கியா அப்ப இவன் செஞ்சது சரியா ஜெனி என்று கேக்கிறாள். பிறகு கோபியும் பாக்கியாவ பேசிக்கொண்டிருக்கான். அதைத் தொடர்ந்து ஜெனி செழியன் பண்ணது எல்லாம் சரி தான் என்று சொல்லுறாள். இதைக் கேட்ட பாக்கியா இது கொஞ்சம் கூட சரியில்ல என்று சொல்லுறாள்.

பின் கோபியும் வீட்டில வேலை செய்யுற செல்வி பற்றி ஜோசிக்கிறத விட்டுட்டு முதல்ல நம்ம பிள்ளைகளைப் பற்றி ஜோசி என்கிறான். அதுக்கு பாக்கியா நான் இனியாவப் பத்தி உங்க எல்லார விடயும் ஜோசிக்கிற படியால தான் நீங்க செஞ்சது தப்பு என்று சொல்லுறேன் என்கிறாள். அதுக்கு ஜெனி அப்ப நீங்க செழியன அடிக்கிறது மட்டும் சரியோ என்று கேக்கிறாள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement