தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் தனித்துவமான இடத்தை பிடித்த பவன் கல்யாண் திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக சேவை மற்றும் அரசியல் உலகிலும் தனது தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.
பவன் கல்யாண் தனது திரைப்பயணத்தை 1996ம் ஆண்டு 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற படத்தின் மூலம் ஆரம்பித்தார். இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், அதன்பிறகு வந்த 'தோலிப் பிரேமா' படம் அவரை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றது. 1998ல் வெளியான இந்த படம் அவரை நடிகராக மக்கள் மத்தயில் அடையாளபடுத்தக் காரணமாகியது.
இதன்பிறகு தொலீஸா , பட்ரி, குஷி , ஜல்சா மற்றும் கபீர் சிங் போன்ற படங்கள் அவரை தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக மாற்றின. இவரது அசாதாரணமான ஸ்டைல் , ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகளின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களை அதிகளவில் ஈர்த்தது.
பவன் கல்யாணின் அடுத்த மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவான படம் 'ஹரி ஹர வீர மல்லு' ஆகும். இப்படம் தெலுங்கு சினிமாவில் மிகுந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள படமாக காணப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படம் முதலில் இம்மாதம் 28ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் சில பின்னணிப் பணிகள் காரணமாக, தற்போது இப்படம் 2025 மே 9ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இப்படத்தை கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நிதி அகர்வால் நடித்துள்ளார். இவரது நடிப்பு கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் பிரமாண்டமான கதைக்களம், வரலாற்று பின்னணி மற்றும் யுத்தக் காட்சிகள் போன்றவை ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!