• Dec 27 2024

ரீரிலீஸ் ஆன ‘கில்லி’ படத்திற்கு ஒரு சக்சஸ் மீட்.. விஜய்யை சந்தித்து வாழ்த்திய பிரபலங்கள்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!


தளபதி விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் சமீபத்தில் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் புதிய ரிலீஸ் படங்களுக்கு இணையாக வசூல் செய்து சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் படம் வெளியான முதல் நாளே சக்சஸ் மீட் கொண்டாடி வரும் நிலையில். நஷ்டம் அடைந்த படத்துக்கு எல்லாம் கூட சக்சஸ் மீட் கொண்டாடி வரும் நிலையில் உண்மையாகவே 20 ஆண்டுகள் கழித்து ரிலீஸ் ஆகி சக்சஸ் ஆன ‘கில்லி’ படத்திற்கு தற்போது சக்சஸ் மீட் கொண்டாடப்பட்டுள்ளது.

அந்த வகையில் ‘கில்லி’ படத்தின் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம், சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோர் தளபதி விஜய்யை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் விஜய்க்கு ஆளுயர மலர் மாலையை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து, இனிமேல் நடிக்க வேண்டாம் என்ற முடிவை மறுபரிசீலனை செய்யும் படி கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

அநேகமாக உலகிலேயே ரீரிலீஸான படத்திற்கு ஒரு சக்சஸ் மீட் வைத்து மாலை அணிவித்து கொண்டாடுவது ‘கில்லி’ படத்திற்காக தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement