• Dec 25 2024

'நூல் விடு' ரொம்ப மோசமா மண்ணைக் கவ்விய பாய்ஸ் டீம்! சீறிப் பாய்ந்த கேர்ள்ஸ் டீம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற நல்ல வரவேற்பால் தற்போது எட்டாவது சீசன் வரை வெற்றிகரமாக பயணித்து வருகின்றது.

அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனில் உலக நாயகன் கமலஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி களம் இறங்கி உள்ளார்.

ஆரம்பத்தில் இவருக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில் முதல் வாரத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். கச்சிதமாக பேசி போட்டியாளர்களின் குறை நிறைகளை தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்கின்றார். அத்துடன் நீண்ட நேரம் அலட்டிக் கொள்ளாமல் குறுகிய நேரத்திற்குள்ளேயே கூற வந்த கருத்துக்களை கூறி முடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.


இந்த நிலையில், இன்றைய நாளுக்கான பிக் பாஸ் சீசன் 8ன்  முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் நூல் விடு என்ற டாஸ்க் ஆண்கள் பெண்கள் அணிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில் பெண்கள் அணி தான் வெற்றி பெற்றுள்ளனர். 

தற்போது குறித்த ப்ரோமோ வைரலாகி வருகின்றதோடு அதில் வெற்றி பெற்ற பெண்கள் அணிக்கும் ரசிகர்கள் தமது ஆதரவை  தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement