• Dec 24 2024

மீண்டும் மீண்டுமா? 4வது காதல் குறித்து வனிதா விஜயகுமார்! திருமணம் செய்ய முடிவு!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகையான வனிதா விஜயகுமார்  கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த நிலையில் நடிக்க வந்த வேகத்தில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அந்த திருமணம் மூலம் விஜய் ஸ்ரீஹரி, ஜோவிகா என்கிற பிள்ளைகளுக்கு தாயானார். ஆகாஷுடனான திருமணம் விவாகரத்தில் முடிந்தது. 


இதையடுத்து நடந்த திருமணம் மூலம் ஜெய்னிதாவுக்கு தாயானார் வனிதா. அந்த திருமண வாழ்க்கையும் நிலைக்கவில்லை. இதற்கிடையே ராபர்ட் மாஸ்டரும், வனிதாவும் காதலித்தார்கள். ஆனால் அந்த காதல் முறிந்துவிட்டது. இருப்பினும் ராபர்ஸ்ட் மாஸ்டரும், வனிதாவும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.


லாக்டவுன் நேரத்தில் பீட்டர் பால் மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார் வனிதா. அந்த திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது.இதையடுத்து கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வந்த வனிதாவின் வாழ்க்கையில் மீண்டும் காதல் வந்திருக்கிறது. ஆள் இருக்கு, ஆனால் அது யாரென்று சொல்ல மாட்டேன் என கூறிவிட்டார் வனிதா.


வனிதா தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். தான் இயக்குநராகியிருக்கும் மிஸஸ் அன்ட் மிஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். ஜோவிகா தயாரித்திருக்கும் மிஸஸ் அன்ட் மிஸ்டர் படத்தை விளம்பரம் செய்ய வனிதா, ராபர்ட்டுக்கு திருமணம் போன்று அழைப்பிழதை வெளியிட அது வைரலாகிவிட்டது. 

Advertisement

Advertisement