• Oct 26 2024

அஜித் ரசிகர்களுக்காக! இந்தா புடி அப்டேட்! விடாமுயற்சி டீசர் ரிலீஸ்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

முதல் முறையாக மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இதன் அப்டேட் செய்திகள் வரும் வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஒரு அப்டேட்வும் வரவில்லை. இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. 


லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று முடிந்ததாக தகவல் வெளியானது. ஆனால், இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.


அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாகும் என்கின்றனர்.


விடாமுயற்சி படத்திலிருந்து இதுவரை போஸ்டர்கள் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில், வருகிற 31ஆம் தேதி தீபாவளிக்கு படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 


Advertisement