• Dec 25 2024

பின்னாடி போயி தான் கவுண்டர் அடிப்பியா? VJ விஷாலுக்கு செருப்படி கொடுத்த சவுண்டு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் உலகநாயகன் கமலஹாசன் விலகியதை தொடர்ந்து இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த சீசனில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து ஹவுஸ்மேட்ஸ்களை டீமாகவே கேம் விளையாட வைத்து வருகின்றார்கள். இதில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களுள் ரவீந்தர், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா, தியா தியாகராஜன் ஆகிய ஐந்து பேர் எலிமினேட்டாகி வெளியே சென்று உள்ளார்கள்.

எனினும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தவர்களோடு மொத்தமாக 19 போட்டியாளர்கள் காணப்படுகின்றார்கள். இதில் சௌந்தர்யா ரசிகர்களை பெரிதும் கவர்ந்த போட்டியாளராக காணப்படுகின்றார். அதிகப்படியான ஓட்டுக்களை பெற்று முன்னணியில் காணப்படுகின்றார். இவருக்கு பிஆர் டீம் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

d_i_a

இந்த நிலையில், இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ  வெளியாகி உள்ளது. அதில் சௌந்தர்யா பிக் பாஸ் வீட்டில் உள்ள சக ஆண் போட்டியாளர்களை கிழித்தெடுக்கும் சம்பவம் தரமாக காட்டப்பட்டுள்ளது.


அதன்படி சௌந்தர்யா தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கின் படி தைரியமா ஒன்னு சொல்ல போறேன் அத எல்லாரும் கேட்கப் போறீங்க என்று ஆண் போட்டியாளர்கள் முன்பு கதிரையில் சொல்லிக் கொண்டு அமருகிறார்.

அதில் விஜே விஷாலை பார்த்து நீ மூஞ்சிக்கு நேரா பேசவே மாட்டியா? பின்னாடி போயி தான் கவுண்டர் அடிப்பியா? என நேருக்கு நேராக கேட்கின்றார். மேலும் தீபக் ப்ரோ உங்களுக்கு தெரிந்த மேனசோட நீங்க விளையாடுங்க..... எங்களுக்கு தெரிஞ்ச மேனசோட நாங்க விளையாடுகிறோம். இதுக்கு பிறகு நான் உங்ககிட்ட வந்து டாஸ்க் பண்ணுங்க டாஸ்க் பண்ணுங்க என்று கெஞ்ச மாட்டேன் என சௌந்தர்யா குறிப்பிட்டுள்ளார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement