• Dec 25 2024

என் மகனா இது! நானே மிரண்டு போய்ட்டேன்! எஸ் ஏ.சந்திரசேகர் கருத்து!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தனது 69வது திரைப்படத்துடன் நடிப்பதை நிறுத்தி முழுமையாக அரசியலில் இறங்க போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில்  தமிழக வெற்றிக்கழகம்  என்ற கட்சியை ஆரம்பித்து  மாபெரும் மாநாடு நடத்தி  விஜய்க்கு மேடைகள்ல பேசத் தெரியாதுன்னு சொன்னவங்க வாயை எல்லாம் ஒட்டுமொத்தமா அடைக்கும் வகையில் பேசியுள்ளார். 


லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அப்படி ஒரு வேகமான பேச்சையும், ஆவேசத்தையும் கண்டவர்கள் கதிகலங்கி விட்டார்கள். குறிப்பாக பல அரசியல்வாதிகளுக்கு இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மக்கள் இவரது கட்ச்சியில் தொண்டர்களாக பணியாற்றி வருகிறார்கள். 


அதனால் தான் மாநாட்டில் விஜய் பேசிய டாபிக்கையே ஒரு வாரமாக வைத்து விமர்சித்து வந்தார்கள். ஆனாலும் முதல் மாநாட்டையே வெற்றிகரமாக கொண்டு சென்றது பெரிய சாதனை தான். மாநாட்டில் விஜய் பேசியது குறித்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு விடீயோவில் இவ்வாறு கூறியுள்ளார். 


விஜய் மாநாட்டுல அப்படிப் பேசுவாருன்னு நினைக்கவே இல்லை. மிரண்டு போய் அரண்டு போயிட்டேன். என் புள்ளையா இப்படி வேகமா பேசுறாருன்னு அசந்துட்டேன். முதல்ல அப்படித்தான் 5 நிமிஷம் பார்த்துக்கிட்டே இருந்தேன். அப்புறம் கைதட்ட ஆரம்பிச்சிட்டேன். சினிமாவுல நடிப்பார் ஓகே. ஆனா ஸ்டேஜ்ல அப்படிப் பேசிப் பார்த்ததே இல்ல. எல்லாம் சேந்து அவரை பேச வச்சிருக்குன்னு நினைக்கிறேன். என்று பெருமையாக பேசியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement