• Dec 26 2024

என்ன சார் இப்படி ஹைப் ஏத்துறீங்க?.. வெங்கட் பிரபு வெளியிட்ட ட்ரெய்லர் போஸ்ட்... "Goat Movie Trailer"

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் படம் தன கோட். இந்த திரைப்படத்திற்கான ட்ரெய்லர் இன்னும் சில மதியாளங்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து அடுத்து விடீயோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிக்கொண்டிருக்கிறார்.


கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இன்றைய தினம் இதன் ட்ரெய்லர் வெளியாகும் என கூறப்பட்டது. நடிகர் விஜயுடன் கோட் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, மைக் மோகன், சினேகா உட்பட பலர் நடிப்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் காணப்படுகின்றது. சமீபத்தில் கோட் படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி  ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாக இருப்பதால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.


இந்நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் ட்ரெய்லர் ரிலீஸ் என சொல்லும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபு டுவிட்டர் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களினால் வேகமாக வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement