• Dec 26 2024

படம் பார்க்க வரவேண்டாம்... கொட்டுக்காளி கதை இதுதான்... சீக்ரெட் உடைத்த சூரி...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூரியின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் கொட்டுக்காளி. இது ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் நடிகர் சூரி, அன்னா பென், இயக்குநர் பிஎஸ் வினோத் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


காமெடியனாக தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவங்கிய நடிகர் சூரி, தற்போது ஹீரோவாகியுள்ளார். கடந்த ஆண்டில் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்திருந்த விடுதலை படம் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் வரும் 23ம் தேதி சூரியின் அடுத்த நாயகன் அவதாரமாக கொட்டுக்காளி படம் ரிலீசாக உள்ளது. முன்னதாக கூழாங்கல் என்ற சிறப்பான படத்தை கொடுத்து சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ள பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படம் உருவாகியுள்ளது. 


தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகர் சூரி, இந்தப் படம் காலை முதல் மாலை வரை நடக்கும் பயணங்களின் கோர்வையாக உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பயணம் டெரரான பயணமாக அமைந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல் 15 நிமிடங்கள் ஸ்லோவாக இருப்பதாக தெரியும், இதுதான் இந்தப் படத்தின் மேக்கிங் ஸ்டைல் என்றும் சூரி கூறியுள்ளார். 


எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் கொட்டுக்காளி படத்தை பார்க்க வந்தால் படம் மிகச் சிறப்பான மற்றும் வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்றும் சூரி தெரிவித்துள்ளார். மற்ற படங்களை போல எதிர்பார்த்து கொட்டுக்காளி படத்தை பார்க்க வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement