• Dec 25 2024

கொஞ்சநஞ்ச ஆட்டமா ஆடினீங்க கோபி... இப்போ கம்பி எண்ண போறீங்களே?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று ஏராளமான இல்லத்தரசிகள் ரசிகர்களாக காணப்படுகின்றார்கள். அதற்கு காரணம் இந்த சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி தனது குடும்பத்தை, பிள்ளைகளின் எதிர்காலத்தை, விவாகரத்தான கணவரின் பெற்றோரை வைத்து தாங்கும் விதம் தான்.

இதில் தொடர்ச்சியாக பாக்கியலட்சுமிக்கு பல இன்னல்கள் வந்த போதும் அவர் அதையெல்லாம் தகர்த்து முன்னேறி செல்லும் விதமும், அவரது தன்னம்பிக்கை விடாமுயற்சி என்பன பலருக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் காணப்படுகின்றது.

தற்போது இந்த சீரியலில் கர்ப்பமாக இருந்த ராதிகா,கால் தடக்கி  விழுந்ததில் அவரின் கர்ப்பம் கலைந்து விடுகின்றது. இதனால் இதற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று அவர் மேல் பழியை போட்டு வெளியே துரத்தி விடுகின்றார்கள். கோபியும் இதுக்கு உடனடியாக இருக்கின்றார்.


ஆனாலும் பாக்கியலட்சுமி கோபிக்கு, உங்க அம்மாவை நீங்களே இப்படி நினைக்கலாமா? என திட்டிச் சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து கோபிக்கு அம்மா பற்றிய நினைப்பும், ராதிகா பற்றிய பயத்திலும் மீண்டும் குடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்த நிலையில், தற்போது கோபி தனது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் போலீசாரால் கைது செய்யப்படுவது போலவும், நீதிமன்றத்தில் ஆஜராகுவது போலவும் காணப்படுகிறது.

இதன் காரணத்தால் கோபி என்ன பிரச்சனை செய்துவிட்டு போலீஸ், கோர்ட் என்று சென்றுள்ளார் என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் எப்படி இருந்த கோபி  இப்படி ஆகிவிட்டாரே என்றும், கோபிக்கு நல்லா தேவைதான் என்றும் ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றனர்.


Advertisement

Advertisement