• Dec 26 2024

தங்க விலைக்கு நிகராக கல்கி 2898 ஏடி படத்தின் டிக்கெட் விற்பனை..? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள கல்கி 28 98 ஏடி திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதில் கமல்ஹாசன், அமிர்தா பச்சன், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்மறையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது. இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் டிக்கெட் புக்கிங் மட்டும் கிட்டத்தட்ட 13 மில்லியன் எனவும் இதன் மூலம் ஏறக்குறைய 37 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், கல்கி 28 98 ஏடி படத்திற்கு மும்பை திரையரங்குகளில் நேரடியாகவே டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


அதன்படி மும்பையில் உள்ள  Maison INOX: BKC இல் உள்ள ஜியோ வேர்ல்ட் பிளாசாவில் கல்கி 2898 ஏ.டி. படத்துக்கான டிக்கெட்டுகளை ரூ.2,300க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இன்சிக்னியா, வோர்லி மற்றும் PVR ICON: ஃபீனிக்ஸ் பல்லேடியம், லோயர் பரேல், படத்தின் டிக்கெட்டுகள் ரூபாய் 1560இல் இருந்து ரூபாய் 1,760 வரை விற்பனை செய்யபடுகின்றது.


அத்துடன் ஆந்திரா பிரதேச அரசு சமீபத்தில் இந்த படத்தின் டிக்கெட் விலையை உயர்த்த அனுமதித்துள்ளது. அதன்படி ஒற்றைத் திரையரங்குகளுக்கு 75 ரூபாயும், மல்டிபிளாக்ஸ்களுக்கு 125 ரூபாயும் டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதிக விலைக்கு கல்கி படத்தின் டிக்கெட் விற்கப்படுவதை பார்த்தால் தங்கத்தின் விலைக்கு நிகரான விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement