• Dec 26 2024

நடுரோட்டுக்கு வந்த கோபி.. தலையில சைக்கிள் மட்டும் தான் மிச்சம்! பாக்கியலட்சுமியில் அடுத்தது..??

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல், இல்லத்தரசிகள் மத்தியில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. ஆனாலும் இதன் கதைக்களம் தற்போது மாறுபட்ட நிலையில் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகனாக கோபி கேரக்டரில் நடிப்பவர் தான் நடிகர் சதீஷ். இவருக்கு சின்னத்திரையில் அமோக வரவேற்பு காணப்படுகிறது.

அதிலும் பாக்கியலட்சுமி சீரியலில் இவர் பாக்கியாவுக்கு கணவராக நடித்த காலங்களில் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. இவரது கேரக்டர் ஒரு கெத்தாக காணப்பட்டது. ஆனால் தற்போது ராதிகாவை திருமணம் செய்த பிறகு இவர் ஒரு கோமாளியாகவே பார்க்கப்படுகிறார்.

அதிலும் தற்போது இந்த சீரியலில் ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் பேரக்குழந்தைகள் இருக்கும் நிலையில் கோபி தற்போது ராதிகாவின் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். இதனை இன்னும் வீட்டாருக்கு தெரிவிக்காத நிலையில் பாக்கியாவுக்கு மட்டும் ராதிகா சொல்லியுள்ளார். 


இதன் காரணமாக இனிவரும் எபிசோடுகளில் கோபி அப்பாவாக  போகும் விஷயத்தை அறிந்தால் பாக்கியாவின் பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. உண்மை தெரிந்தும் பாக்கியா மௌனம் காக்கும் போது அவரது பிள்ளைகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் சதீஷ், நடுரோட்டில் சைக்கிளை தூக்கி வைத்துக் கொண்டவாறு போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் கடற்கரையில் தனியாக அமைந்து யோசனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கோபி மண்ட குளம்பிடுச்சா? 2 குடும்பத்தயும் சமாளிக்க முடியலையா? தாத்தாவாகி இப்ப அப்பா ஆகிவிட்டீர்களே என கலாய்த்து வருகிறார்கள்.

இதேவேளை, இந்த புகைப்படங்கள் அடுத்த எபிசோடுக்கான ஷூட்டிங்கா இருக்குமோ எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement

Advertisement