• Dec 26 2024

கோபி வீட்டில் மீண்டும் குவா.. குவா.. சத்தம் கேட்கப்போகுது! அழுது புலம்பும் எழில்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எழில் தனியாக நின்று அழுது கொண்டிருக்கிறார். அவருக்கு அமிர்தா ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க அங்கு வந்த பாக்கியா, உண்ட கனவை நோக்கி போ.. இடையில நடக்கிற எதையும் பார்த்து பின் வாங்காத.. நான் உன்னோட கார்ல வார மாதிரி.. அவோர்ட் வாங்குற மாதிரியெல்லாம் கனவு கண்டுக்கொண்டு இருக்கின்றேன் என எழிலுக்கு ஊக்கம் கொடுக்கிறார்.

இன்னொரு பக்கம் கோபி வீட்டுக்கு வந்து ராதிகாவை கூப்பிடவும் அவர் கதவை மூடி தூங்கி விடுகின்றார். வேணும் என்றே அவர் எழும்பாமல் இருக்க , கோபி போனில் பாட்டை போட்டுவிட்டு கேட்டுக் கொண்டிருக்கின்றார். இதனால் சத்தம் கேட்டு அங்கு வந்த ராதிகா, மையூ தூங்குகின்றார் அதனால் பேசாமல் இருக்குமாறு எச்சரித்துவிட்டு செல்கின்றார். 

இதை தொடர்ந்து ஜெனி குழந்தை வைத்து விளையாடிக் கொண்டிருக்க, அங்கு வந்த செழியனிடம் நீ ரொம்ப மாறிட்ட.. நான் நினைச்ச மாதிரி இப்பதான் இருக்கிறா.. இனி அம்மாக்கு காசு கொடுக்கும்போது தனியாக வச்சு கொடு என பேசிக் கொண்டிருக்கின்றார்.


அந்த நேரத்தில் ஜெனி சத்தி எடுக்க, செழியன் என்னாச்சு என பதறுகிறார். ஜெனி தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகம் இருக்கின்றது இதனால் போய் பிரக்னன்சி செக் பண்ணுவதற்கு ஸ்டிக் வாங்கி வருமாறு சொல்லுகின்றார்.

அதன் பின்பு ஜெனி பாக்யாவிடம் சென்று தனக்கு சத்தி  வருவதாகவும் தலை சுற்றுவதாகவும் சொல்ல, எதுவும் செய்து தரட்டுமா என பாக்கியா கேட்கின்றார். ஆனால் அங்கிருந்த ஈஸ்வரி வந்து ஜெனியிடம் ஏதும் விசேஷமா என கேட்க, அவர் ஆமாம் என்பது போல் தலையாட்டுகின்றார். இதனால் எல்லாரும் சந்தோஷப்படுகிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement