• Dec 26 2024

வெளியானது "கடைசி உலகப்போர்" படத்தின் புதிய அப்டேட் !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

சொல்லிசை மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான ஒரு பையன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறான் யாரும் எதிர்பாரா விதத்தில் தொட்டதெல்லாம் வெற்றியாய் அத்தனை பாடல்களும் ஹிட். அடுத்து அவன் இசையமைக்கும் படங்களின்  எதிர்பார்ப்பை அதிகரித்து விடுகிறான்.


அவனது அடுத்த பரிமாணமாய் இயக்குனர்,நடிகர்,பாடலாசிரியர்,பாடகர் என ஒரு திரைப்படத்துடன் தமிழ் ரசிகர்களை சந்தித்தான் வெற்றி ,அவனே எதிர்பாரா ஒரு பெருவெற்றி.தொடர்ந்தும் நடிகன் இசையமைப்பாளன் என பயணித்துக்கொண்டிருக்கும் எங்கள் ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த பெரும் அறிவிப்பு தான் "கடைசி உலகப்போர்".

Hiphop Tamizha Aadhi Next Movie KADAISI ...

ஹிப் ஹாப் ஆதியின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் கடைசி உலகப்போர் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார் ஆதி."கடைசி உலகப்போர்" படத்தின் முதலாவது பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் ரசிகர்களுக்கு அறியத்தந்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. 

   


Advertisement

Advertisement