• Apr 18 2026

கோமதி பிரியாவுக்கு அடித்த ஜாக்பாட்..? எல்லா மொழியிலும் ரவுண்டு கட்டி நடிக்கிறாங்களே

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலம்  மக்கள் மத்தியில்  பிரபலமானவர்களாக  சீரியல் நடிகர்களும் காணப்படுகின்றனர்.  அதிலும் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் பலர் ஜொலித்து வருகின்றனர். 

வினுஷா, இந்துஜா, பவானி சங்கர் பிரியா  போன்ற நடிகைகளின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இவர்களின் வரிசையில் சமீபத்தில் இணைந்தவர் தான் கோமதி பிரியா. 

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் என்ற சீரியலில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு  பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்த சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் மூலம் பட்டித்  தொட்டி எங்கும் பேமஸானார். 


தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற தொடர்களிலும் கோமதி பிரியா நடித்துள்ளார்.  மேலும் சமீபத்தில் அடியே சிறுக்கி மகளே என்ற ஆல்பம் பாடலிலும் நடித்துள்ளார்.  அதில் அவருக்கு ஜோடியாக  சின்ன மருமகள் சீரியலின் நடிகர் நவீன் நடித்துள்ளார். 

இந்த நிலையில் , விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலின் மழையாள ரீமேக்கான Ee Puzhayum Kadannu என்ற தொடரில் நடிக்க கமிட்டாகி உள்ளார். தற்போது இது தொடர்பான ப்ரோமோவும் வெளியாகி வைரலாகி உள்ளது.


Advertisement

Advertisement